ஆப்கானிஸ்தானில் புகழ் பெற்ற நாட்டுப்புறப் பாடகரை தாலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அந்தராபி பள்ளத்தாக்கில் உள்ள பக்லான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஃபவாத் அந்தராபி. நாட்டுப்புறப் பாடகரான இவர் அப்பகுதியில் புகழ் பெற்று விளங்கினார். நேற்று இவரது வீட்டுக்குள் புகுந்த தாலிபான்கள், ஃபவாத்தை வீட்டை விட்டு வெளியே இழுத்து வீசினர். தொடர்ந்து அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். ஃபவாத் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளூர் தாலிபான் கவுன்சில் தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments