தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் திருமணத்தில் புதுமையை விரும்பிய ஒரு ஜோடி பனிமலை உச்சியில் கல்யாணத்தை நடத்தி உள்ளது. தலைநகர் லா பாஸ்-ன் மேற்கு பகுதியில் உள்ள இலிமானி மலையில் கொட்டிக் கிடக்கும் பனிக்கு மத்தியில் மூன்று நாட்கள் பயணித்த ஜோடி ஒருவழியாக திருமணத்தை முடித்துள்ளது. அங்கும் கொரோனா விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டதோ என்னவோ குறைந்த அளவிலானோர் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டு உறைபனிகளை தூவி வாழ்த்தினர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments