மதுரை அலங்காநல்லூரில் குப்பையில் கிடந்த காலாவதியான உணவு பொருளை சாப்பிட்டு சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அதே உணவுப் பொருளை சாப்பிட்டதாக மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். அலங்காநல்லூர் ஒன்றாவது வார்டு பகுதியை சேர்ந்த 13 மற்றும் 11 வயதான 2 சிறுவர்கள் குப்பையில் கிடந்த காலாவதியான ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 11 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments