ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்று தாலிபான்கள் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 90 நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கன் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, தாலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியுசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். காபூல் விமான நிலையம் நோக்கி வரும் ஆப்கான் மக்களை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments