Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை மறுநாள் புதன்கிழமை பள்ளிகள் திறப்பு

கொரோனா தொற்று இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தற்போது வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்த முறை ஊரடங்கில் கடற்கரைக்கு அனுமதி, தியேட்டர் திறப்பு என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெருந்தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும், 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் ஒன்றாம் தேதி தொடங்கப்படுகின்றன. இதர வகுப்புகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 95 விழுக்காடு ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே புதன்கிழமையன்று கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் பள்ளி-கல்லூரிகளை திறப்பதற்கு இன்றும், நாளையும் என 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடடிவக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments