திருச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்கத்தை ஆசன வாய் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பதுக்கி வைத்துக் கடத்திவந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயிலிருந்து விமானம் மூலமாகத் திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரைச் சோதனை செய்தனர். அவரது ஹேண்ட் பேக்கில் சோதனை செய்தலில், ஒன்றரை கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதேபோல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் அவரது ஆசனவாயில் மறைத்து 575 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ஒன்றரை கோடி என்று மதிப்பிட்டுள்ளனர் அதிகாரிகள்.
Also Read: தங்கக் கடத்தல் விவகாரம்; விசாரணையில் கஸ்டம்ஸ் அதிகாரி! - திருச்சி ஏர்போர்ட்டில் நடப்பது என்ன?
கடத்தி வந்த தங்கம் யாருக்காகக் கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள். தங்கம் கடத்தி வரும் நபர்களுடன் சுங்கத்துறை அதிகாரிகள் யாரேனும் உதவி செய்துள்ளனரா? என்று அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கடந்த மாதம், திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரின் செல்போனில் தங்கம் கடத்திவரும் பயணியின் புகைப்படங்கள் இருந்ததால் அவரையும் அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News
0 Comments