சேலத்தில் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான். நச்சுவாயனூரைச் சேர்ந்த சபரி என்ற 14வயது சிறுவன் கடந்த 22ந்தேதி முதல் காணாமல் போய் விட்டான். சிறுவனின் தாய் லதா வேலை செய்யும் ஜவுளி கடை உரிமையாளர் சரவணனிடம் செல்போனில் பேசிய நபர், 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் சிறுவனை விட்டு விடுவதாகக் கூறியுள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் எண் மூலம் செல்வகுமார் என்பவனைக் கைது செய்தனர். அவன் தச்சு பட்டறை நடத்தி வந்ததும், தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் சிறுவனை கடத்தி அதன் மூலம் துணி கடைக்காரரிடம் இருந்து பணம் பறிக்க முயற்சி மேற்கொண்டதும் தெரியவந்தது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments