வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மக்கள் கூடுவதைத் தடுக்க, சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில், தேசிய அளவில் கொரோனா தொற்று ஒரு நிலையான இடத்திற்கு வந்துள்ள நிலையில், சில மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் சமூகப் பரவலாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதிகமாக தொற்று எண்ணிக்கை உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் தொற்று எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வருவதால், மக்கள் கூடுவதைத் தவிர்க்க உள்ளூர் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் அஜய் பல்லா அறிவுறுத்தியுள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதிபடுத்த தடுப்பூசி இயக்கங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments