Ticker

6/recent/ticker-posts

Ad Code

புதுச்சேரி சுருக்குமடி வலை பிரச்னை - 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

புதுச்சேரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய மீனவ கிராம மக்கள் இடையே சுருக்கு மடி வலை பிரச்னை தொடர்பாக நேற்று கடும் மோதல் ஏற்பட்டது . இதனை தடுப்பதற்காக நல்லவாடு பகுதியில் ஒரு முறை துப்பாக்கிச்சூடும், தேங்காய்திட்டு முகத்துவாரம் பகுதியில் நடந்த மோதலை தடுக்க 14 முறை வானத்தை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மோதல் நடந்த 3 மீனவ கிராமங்களின் கடலோர பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments