Ticker

6/recent/ticker-posts

Ad Code

கண் முன்னே இறந்த காதலி கதவை மூடிய காதலன் குடும்பம்..! 13 ஆண்டுகால காதலுக்கு அஞ்சலி

தருமபுரி அருகே 13 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறப்படும் காதலன் வீட்டு முன்பு விஷமருந்தி இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ராஜகொல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஞானமொழி, பிடெக் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரும் குட்டூர் பகுதியைச் சேர்ந்த சொந்த தாய்மாமன் மகனான முரளிதரனும் ஒருவரை ஒருவர் 13 வருடமாக காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு ஒன்றாக வெளியே செல்வதும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுமாக இருந்துள்ளனர். இதில் 2 முறை ஞானமொழி கர்ப்பமடைந்து கருக்கலைப்பும் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓராண்டு காலமாக காதல் ஜோடி சரியாகப் பேசாமல் இருந்ததுள்ளனர். முரளிதரனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்யும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். இதனால் அதிர்ந்துபோன ஞானமொழி ஒரு முடிவு தெரிய வேண்டும் என்ற உறுதியோடு, பெற்றோருக்குத் தெரியாமல் ஆன்லைனில் விஷ மருந்தை வாங்கிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை முரளிதரன் வீட்டுக்குத் தனியாகச் சென்றுள்ளார். முரளிதரன் வீட்டில் இல்லாத நிலையில், அவர்களது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முரளிதரனுக்குத் தன்னைத் திருமணம் செய்துகொடுக்கவில்லை என்றால் இங்கேயே விஷமருந்திவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அதனைக் கண்டுகொள்ளாத முரளிதரன் குடும்பத்தினர் கதவை உட்பக்கமாக தாழிட்டுக்கொண்டு உள்ளேயே இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து விஷத்தை அருந்திய ஞானமொழி, வீட்டு வாசலிலேயே உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயற்சிக்காமலும் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமலும் முரளிதரன் குடும்பத்தினர் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 45 நிமிடங்கள் கழிந்த நிலையிலும் முரளிதரன் குடும்பத்தினர் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் ஞானமொழியை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். மகளின் உடலைப் பார்த்து மருத்துவமனை வளாகத்தில் தரையில் படுத்து அழுத ஞானமொழியின் தாய் வள்ளி, "எல்லோருடைய கண்முன்னே என் மகள் துடிதுடிக்க இறந்திருக்கிறாளே, யாராவது முன்வந்து காப்பாற்றி இருக்கலாமே" எனக் கதறியது காண்போரை கலங்கடித்தது. முரளிதரன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு உறவினர்கள் சாலை மறியலிலு ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களிமிருந்து புகாரைப் பெற்று, முரளிதரனின் தந்தையைக் கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள முரளிதரனின் தாயை தேடி வருகின்றனர். ஜார்கண்டிலுள்ள முரளிதரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments