பரமத்திவேலூர் அருகே, விற்பனை செய்வதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வுத்துறை போலீஸார் பறிமுதல் செய்து, 3 பேர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: `₹500 வேண்டாம், ₹100 நோட்டா கொடுங்க!' - சில்லறை கேட்பது போல் நூதன மோசடி செய்த கும்பல்; என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் திலகவதி, சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தில் அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் லாரி ஒன்று நிற்பதை பார்த்தனர். உடனே, அந்த லாரியை சோதனை செய்தனர். இதில், எவ்வித ஆவணமும் இன்றி சட்ட விரோதமாக அதிக லாபத்திற்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டீசல் கலப்பட டீசல் என்பதும், விற்பனைக்காக வைத்திருப்பதாகவும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், இராந்தகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜெயசீலன் (வயது: 36), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த லாரி கிளீனர் குபேந்திரபாண்டியன் (வயது: 35) மற்றும் பரமத்தி வேலூர் அருகே உள்ள கரையாம்புதூரைச் சேர்ந்த குப்புசாமி (எ) குணசேகரன் (வயது: 49) ஆகிய மூன்று பேரையும் நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வுத் துறை போலீஸார் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தலைமறைவான சென்னை குறுக்குப்பேட்டையேச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரைத் தேடி வருகின்றனர். இப்படி, கலப்பட டீசல் தமிழகம் முழுக்க விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதனால், மோகன்ராஜை பிடித்தால், கலப்பட டீசல் விற்பனையில் ஈடுப்பட்டு வரும் மொத்த நெட்வொர்க்கையும் வளைக்க முடியும் என்று போலீஸார், மோகன்ராஜை தீவிரமாக தேடிவருகின்றனர்.
Also Read: ஈமு கோழி மோசடி: 10 ஆண்டு சிறை, ₹1 கோடி அபராதம்; கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
from Latest News
0 Comments