ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் விமானம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். கோரசான் மாகாணத்தைச் சேர்ந்த அஹ்மதி மற்றும் நெஜ்ராபி குடும்பத்தினர் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு காபூல் விமானநிலையம் புறப்பட்டனர். அப்போது ஐஎஸ்ஐஎஸ் கே அமைப்பினர் இருப்பதாக நினைத்த அமெரிக்கப் படையினர் ட்ரோன் விமானம் மூலம் அஹ்மதி புறப்பட்ட காரின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments