நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காகப் பதிவு செய்து இருந்தேன். பதிவு செய்திருந்த அதே தினத்தில் நான் கோவிட் பாதிப்புக்குள்ளானதால் தடுப்பூசி போட முடியவில்லை. ஆனால் எனக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் சர்ட்டிஃபிகேட்டை டௌன்லோடு செய்து கொள்ளும்படியும் குறுஞ்செய்தி வந்தது. இதை எப்படிச் சரிசெய்வது?
- சிவஷண்முகராஜன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தச் சம்பவத்தில் நிச்சயம் தவறு நடந்திருக்கிறது. கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நீங்கள் பதிவு செய்திருந்த அதே தினத்தில் உங்களுக்கு கோவிட் தொற்று பாதித்திருக்கிறது. தடுப்பூசி போடாமலேயே நீங்கள் அதைப் போட்டுக்கொண்டதாகக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
உங்கள் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள மாநகராட்சி சுகாதார மையத்திலுள்ள ஐடி துறையை அணுகி, நடந்த விவரத்தைச் சொல்லலாம். அப்படிச் செல்லும்போது உங்களுடைய கோவிட் பாசிட்டிவ் டெஸ்ட் ரிப்போர்ட்டையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா?
அது தடுப்பூசி போடாததற்கான ஆதாரமாக இருக்கும். இது முழுக்க முழுக்க கோவின் ஆப்பில் நடந்த கோளாறு. மாநகராட்சியின் சுகாதார மைய ஐடி துறையினரால் இதைச் சரிசெய்துவிட முடியும். கவலை வேண்டாம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
from Latest News
0 Comments