Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா..? முதலமைச்சர் இன்று ஆலோசனை

நாளையுடன் தமிழ்நாட்டில்  ஊரடங்கு முடியும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு 31ம் தேதியோடு முடிவடைகிறது. திரையரங்குகள் திறக்கவும் பள்ளி, கல்லூரிகள், திறப்பதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments