விஜய் மக்கள் இயக்க மாவட்ட மகளிரணிச் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் பெண்ணால், தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், கணவனுடன் சேர்ந்து தன்னைக் கொலை செய்ய அந்த பெண் சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அ.இ.த.வி.ம.இ அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்று கூறிக்கொண்டு கையில் வாளுடன் சுற்றும் ஏஞ்சல் இவர்தான்..! சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் செல்வம், ஓய்வுக்கு பின்னர் இவர் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தனக்கு சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் பணியில் இருந்த போது தனது மகள் திவ்யா பெயரில் சொந்தமாக சிந்தாதிரிபேட்டையில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்திவந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு தனது மகள் திவ்யாவை தனது சகோதரி மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகைகளும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சீர்வரிசை பொருட்களையும் , மகள் பெயரில் எழும்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இரண்டு வீடுகளையும் எழுதி கொடுத்துள்ளார் செல்வம். திருமணத்திற்கு பின்னர் கணவர் முத்துவிடம் கடையை பார்த்துக் கொள்ள ஒப்படைத்துள்ளார் திவ்யா. 25 ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகையையும் அவர் தான் வாங்கி வந்ததாகவும் அபரிமிதமான வருமானம் வந்ததாலும், ஓய்வுக்கு பின்னரும் தந்தை செல்வம் 10 லட்சம் ரூபாய் தந்ததாகவும், மூன்றரைக் கோடி ரூபாய் ரொக்க பணம் இருந்ததால் அவற்றை பைனான்ஸ் விடுவதாக கூறி களமிறங்கிய கணவன் முத்துவுக்கு ஏராளமான பெண்களுடன் தவறான தொடர்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டும் மனைவி திவ்யா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து தனது தந்தை செல்வத்துடன் வசித்து வருவதாக தெரிவித்தார். தனது 2 வது குழந்தை பிரசவத்தின் போது வீட்டு வேலைக்கு என்று அழைத்து வரப்பட்ட சேத்துப்பட்டை சேர்ந்த ஏஞ்சல் என்ற பெண்ணுடன் முத்துவுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டதாகவும் அது தொடர்பாக போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை கணவனின் போனில் இருந்து கைப்பற்றியதாக தெரிவித்த திவ்யா, தற்போது இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடக்கும் நிலையில் தனது கடை மற்றும் வீட்டை வைத்துக் கொண்டு தரமறுக்கும் கணவன் முத்து மீதும் தன்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டிவரும் கணவனின் காதலி ஏஞ்சல் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆடியோ ஆதாரத்துடன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்ஒரு ஆடியோவில் ஏஞ்சல் பெரிய ரவுடி ஒருவருடன் தான் உரையாடியதாக ஏஞ்சல் கூறுவது பதிவாகியுள்ளது. ஏஞ்சல் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆதாரமாக போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்த திவ்யா தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு கணவனை கடத்திச்சென்று சொத்துக்காக தாக்கியதாக, ஏஞ்சல் மற்றும் அவரது குழுவினருடன் சேர்ந்து தன் மீது பொய்யான புகாரை கணவன் முத்து அளித்ததாகவும் அதனை விசாரித்த நீதிபதி தன் மீது குற்றமில்லை என்று கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். திவ்யாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அவரது கணவர் முத்து தன் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக இது போன்று நாடகமாடுவதாகவும் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரது குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் ஏஞ்சல் குறித்து விசாரித்த போது அவர் விஜய் மக்கள் இயக்கத்தில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை என்று மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments