Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க அமைச்சர் பிளிங்கென் பேச்சுவார்த்தை; ஜனநாயகம், மனித உரிமைகளில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது என விளக்கம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சீனா, ஆப்கான், இந்தோ பசிபிக் வர்த்தகம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுடன் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் குறித்தும் பேச்சு நடத்தினார். ஜனநாயகம் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப அமெரிக்கா கேள்வி எழுப்பிய போது, இரண்டிலும் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, இரு நாடுகளும் கொள்கையளவில் இணைந்து செயல்படுவதாக பிளிங்கென் தெரிவித்தார். அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் சுதந்திரமான எண்ணம் கொண்ட குடிமக்களைக் கொண்டிருக்கிறது. இதனை பாராட்டி வரவேற்பதாக பிளிங்கென் கூறினார். இன்று ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் சவால்களை நட்பு முறையில் இந்தியாவுடன் விவாதித்து ஜனநாயக உறவுகளை பலப்படுத்த இருதரப்பினரும் உறுதி எடுத்துள்ளதாகவும் பிளிங்கென் தெரிவித்தார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments