கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மருத்துவக் கல்வி பயின்ற 24 வயது இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்தவன், தன்னைத் தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டான். கண்ணூரைச் சேர்ந்த ரக்கீல் என்பவன் அந்த மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட காலமாகப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு தலையாக அந்தப் பெண்ணை காதலித்து வந்த அவன், விடுதிக்கு வந்து தோழிகளுடன் உணவருந்திய பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். இதைத் தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து அந்தப் பெண்ணை பல முறை சுட்டுக் கொலை செய்த பிறகு தன்னையும் தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments