ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கியை தாலிபன்கள் அடையாள அட்டையைப் பார்த்த பின்னர் கொடூரமாக துப்பாக்கியால் பல முறை சுட்டு படுகொலை செய்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. முன்பு வெளியான தகவலின்படி இருதரப்பினரிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் செய்தி சேகரித்தபோது சுடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ராணுவத்தினருடன் சென்று கொண்டிருந்த போது, தாலிபன்கள் தாக்கியதால் காயம் அடைந்த டேனிஷ் சித்திக்கி அங்குள்ள மசூதியில் தஞ்சம் புகுந்தார். அவர் அங்கு இருப்பதை அறிந்த தாலிபன்கள் மசூதி மீதும் தாக்குதல் தொடுத்து டேனிஷை பிடித்து கொடூரமான முறைகளில் துன்புறுத்தி சுட்டுக் கொன்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற ஆப்கான் தளபதி அவர் அணியினரும் தாலிபன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments