டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி , 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியுடன் கேலா ஹோபே (khela hobe) நிகழும் என்றார். கேலா ஹோபே என்பது வங்காளத்தில் ஆட்டத்தில் ஒரு கை பார்ப்போம் என்று கூறுவதாகும். டெல்லியில் எதிர்க்கட்சிகளை மோடிக்கு எதிராக ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் லாலு பிரசாத் யாதவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறினார். 2024 ஆம் ஆண்டு தேர்தல் நிலைமை எப்படியிருக்கும் என்று ஆருடம் கூற தான் ஜோசியக்காரர் இல்லை என்று கூறிய மம்தா , அரசியல் கட்சிகளைப் பொறுத்து தான் மாற்றம் நிகழும் என்றார். தமது முடிவை மற்ற கட்சிகள் மீது திணிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சோனியா காந்தி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இதில் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை என்றும் மம்தா தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments