சென்னையை அடுத்த ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி, ஸ்ரீதேவி நகரை சேர்ந்த புருசோத்தமன் என்பவர் சேக்காடு கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு புருசோத்தமன் காவல் பணியில் இருந்த போது அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் இரு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் மதுபோதையில் வளாகத்துக்குள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த புருஷோத்தமன் அவர்களுக்கு அறிவுரை கூற முற்பட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கைகளால் தாக்கிய அவர்கள், அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து புருஷோத்தமன் தலையில் அடித்ததில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காதலர்களான லட்சுமிபிரியா மற்றும் விக்னேசை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments