Ticker

6/recent/ticker-posts

Ad Code

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளம்

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் ஓடும் கங்கை நதியின் நீர் அளவு அதிகளவில் பெருகி உள்ளது. மொரதாபாத் காவல் நிலைய சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. ஆக்ராவில் யமுனை நதியில் கடும் வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. யமுனையில் இருந்து பெருமளவிலான நீர் அணைகளில் திறந்துவிடப்பட்டதால் டெல்லியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனிடையே இமாச்சலப்பிரதேசத்தில் குலு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 குடும்பங்களை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments