Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெகாஸஸ் விவகாரம்: பிரான்ஸ் அரசின் விசாரணையில் புதிய தடயங்கள் சிக்கின

செல்போன்களில் உளவு பார்க்கப்பட்டதற்கான சில தடயங்களை கண்டுபிடித்திருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நிதியமைச்சரின் செல்போனில் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதால் அதனை தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். முன்னதாக பெகாஸஸ் செயலி மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து பிரான்ஸ் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதே போல் பெகாஸஸ் செயலியை விநியோகிக்கும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனமும் தனி விசாரணை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் பெகாஸஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments