கரூரில் மனைவித் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த கணவன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தன் உயிரையும் மாய்துக்கொண்டார். மது பழகத்திற்கு அடிமையான சுப்ரமணியன் இரவு மனைவி சின்ன பொண்ணுவுடன் ஏற்பட்ட சண்டையின் போது மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்று விட்டுத் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. தாய் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைய மகன் போலீசுக்குத் தகவல் அளித்தார். இந்நிலையில் கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் தலை நசுங்கிய நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அது சுப்ரமணியனின் உடல் தான் எனப் போலீசார் உறுதி செய்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments