தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளித்தால் உடனே மக்கள் திரளாகக் கூடி விடுவதால், கொரோனா பாதிப்பு குறித்து இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் ரோபாடிக் கல்லீரல் நன்கொடையாளர் அறுவை சிகிச்சை மைய தொடக்க விழாவில் பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சிலர் அலட்சியப்படுத்துவதால், தனியார் மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments