Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்... பேருந்திலேயே ஏற்றி மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலையில் சென்ற மூதாட்டி அரசுப் பேருந்து மோதி காயம் அடைந்த நிலையில் ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் அதே பேருந்தில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நடந்து உள்ளது. நூறடி சாலையில் சென்று கொண்டு இருந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியுள்ளது. சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல் காவல் ஆய்வாளர் மற்றும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கூட்டாக சேர்ந்து அதே பேருந்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். துரித நடவடிக்கையால் மூதாட்டி உயிர்பிழைத்தார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments