Ticker

6/recent/ticker-posts

Ad Code

“எனக்கு தேவை வெண்கலம் அல்ல; தங்கப்பதக்கம்” - இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா

“ஒலிம்பிக்கில் எனக்கு தங்கப்பதக்கம் தான் தேவை. இப்போதைக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் அடுத்த போட்டியில் நான் கொஞ்சம் சுதந்திரமாக விளையாடுவேன். அது இன்னும் சிறப்பானதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா.

மேலும், பேசிய அவர், “எந்த வியூகமும் இல்லாமல் அனைத்து சுற்றுகளையும் வெல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் விளையாடினேன். அதில் எனது முயற்சியை 100 சதவிகிதம் கொடுத்தேன். வழக்கமாக கவுண்டர் அட்டாக் கொடுப்பதுதான் எனது பாணி. ஆனால் அதை இந்த காலிறுதியில் மாற்றி ஆடினேன். தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை ஆடினேன். சென்னிடம் நான்கு முறை தோல்வியுற்றுள்ளேன். அவர் எப்படி ஆடுவார் என்பது எனக்கு தெரியும். அதற்கு ஏற்றபடி விளையாடினேன். வெற்றி பெற்றேன். அதனால் தான் சொல்கிறேன் எனக்கு தேவை வெண்கலம் அல்ல தங்கப்பதக்கம் என்று” என தெரிவித்துள்ளார் லவ்லினா. 

வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி துருக்கி வீராங்கனை Busenaz Sürmeneli-க்கு எதிராக அரையிறுதில் விளையாட உள்ளார் லவ்லினா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments