கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்திருக்கிறது.
தமிழகத்தில் கணிசமாக குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து வரும்நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்கள் செயல்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தடைவிதிக்கலாம் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்திருக்கிறது.
அதன்படி, நாளைமுதல் ஆக்ஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணிவரை
- ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை
- புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை
- ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை
- ஃபக்கி சாஹிப் தெரு
- அபிபுல்லா தெரு
- புலிபோன் பஜாரில் வணிக வளாகம்
- கொத்தவால்சாவடி சந்தை
- ராயபுரம் சந்தை
- அமைந்தகரை சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments