திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 9 வயது சிறுவனைப் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்துப் பாராட்டினார். துலுக்கம்பட்டியில் கால் தடுக்கி கிணற்றுக்குள் விழுந்த 8 வயது சிறுமியைக் காப்பாற்ற நீச்சல் தெரியாத அவரது தாயார் குணா கிணற்றில் குதித்து தத்தளித்துள்ளார். சித்தியின் அபாயக் குரலைக் கேட்டு கிணற்றில் குதித்த சிறுவன் லோஹித், சித்தியைக் காப்பாற்ற முடியாத போதும் சிறுமியை பத்திரமாக மீட்டு கரை சேர்த்துள்ளான். சிறுவனின் துணிச்சலைப் பாராட்டி ஆட்சியர் சிவராசு 5000 ரூபாய் ஊக்கத்தொகை அளித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments