டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் பளுதூக்குதலில் 73 கிலோ எடைப் பிரிவில் சீன வீரர் Shi Zhiyong தனது முந்தைய உலக சாதனையை முறியடித்து புது சாதனை படைத்தார். 73 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய Shi Zhiyong ஓட்டுமொத்தமாக 364 கிலோ எடையை தூக்கி தனது பழைய உலக சாதனையான 363 கிலோவை முறியடித்து தங்கம் வென்றார். ஏற்கனவே Shi Zhiyong, கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்சில் 69 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கி அப்போதைய உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. வெனிசூலா வீரர் Julio Ruben Mayora Pernia வெள்ளிப் பதக்கமும், இந்தோனேசியாவின் Rahmat Erwin Abdullah வெண்கலமும் வென்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments