நாகை அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்ததாக பெற்றக் குழந்தையைக் கொன்றுவிட்டு உடல்நலம் குன்றி இறந்ததாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டாள். மேலவாஞ்சூரைச் சேர்ந்த அபர்ணா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், கவித்திரன் என்ற 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார் அபர்ணா. தாமரைக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவனுடன் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அபர்ணா, தனி வீடு எடுத்து அவனுடன் குடும்பமே நடத்தி வந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி இரவு இருவரும் தனிமையில் இருக்கும்போது குழந்தை கவித்திரன் அழுதுள்ளான். ஆத்திரத்தில் சுரேஷ் குழந்தையை அடிக்கவே, அது மேலும் வீறிட்டு அழுதிருக்கிறது. இதனையடுத்து குழந்தையின் கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கிக் கொன்ற அபர்ணா, அவசர அவசரமாக குழந்தையை அடக்கம் செய்யவும் முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அபர்ணாவின் கணவருக்குத் தகவல் கொடுக்கவே, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார், அபர்ணாவையும் சுரேஷையும் கைது செய்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments