ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்திலும் காட்டுத் தீ பற்றி வனத்தை கபளீகரம் செய்து வருகிறது. அங்கு Kalajoki ஆற்றின் சுற்றியுள்ள வனப் பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது. தற்போது வரை காட்டுத் தீயில் 300 ஹெக்டர் நிலம் கருகி சேதமானதாகவும், தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 1970-களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஆயிரத்து 600 ஹெக்டேர் நிலம் கருகி போன நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தீயால் பாதிப்பு அதிகரிக்கக்கூடுமோ என அந்நாட்டு அரசு அச்சத்தில் உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments