Ticker

6/recent/ticker-posts

Ad Code

கேரளாவில் தொடர்ந்து 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 22000... கேரளாவுக்கு விரைகிறது மத்திய மருத்துவர் நிபுணர்க்குழு

கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 22 ஆயிரமாக உள்ளது. இன்று 6 பேர் கொண்ட மத்திய மருத்துவர் நிபுணர்க்குழு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மாநில அரசுக்கு உதவ திருவனந்தபுரம் செல்கிறது. கேரளா கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக பிரச்சாரம் செய்யப்படுவது துரதிர்ஷ்ட்டவசமானது என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பக்ரீத் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு கேரள அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றமும் கேரள அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்தியாவின் 50 சதவீத கொரோனா பாதிப்பு கேரளத்தில் தான் உள்ளது. ஆனாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக வீணா ஜார்ஜ் கூறினார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments