அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 2020 -21 கல்வி ஆண்டில், அதாவது நடப்பு கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
மருத்துவப் படிப்புகளில் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடு அறிவித்தது ஆறுதல் தருவதாக உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஓபிசி பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதி வரலாற்றில் முக்கிய நிகழ்வாக உள்ளது. 2021-22-ல் இருந்து மொத்தம் 4,000 ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு என்பதே திமுகவின் கோரிக்கை” என்றவர், ``50 சதவீத இடஒதுக்கீட்டை அடையும்வரை தி.மு.க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். சமூகநீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை தி.மு.கவும்,இந்த அரசும் தொடர்ந்து நடத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read: வன்னியர் இடஒதுக்கீடு... வழக்குகளைக் காட்டி வஞ்சிக்கிறதா தி.மு.க அரசு?
from Latest News
0 Comments