ஜம்மு காஷ்மீர் கிஷ்ட்வர் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதே போன்று இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இரு இடங்களிலும் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் படையினர் ஈடுபட்டுள்ளனர். மணாலி-லே சாலை உள்பட பல்வேறு முக்கியச் சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் லடாக்கின் பல்வேறு சிறுநகரங்களில் இயல்பு வாழ்க்கை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments