இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 81 ரன் மட்டும் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் 23 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 14 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் இலங்கை தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments