Ticker

6/recent/ticker-posts

Ad Code

முதல் மனைவிக்கு தெரியாமல் மேலும் 2 திருமணம் செய்த கல்யாண மன்னன் 2வது மனைவியுடன் கைது

கரூரில் முதல் மனைவிக்கு தெரியாமல் மேலும் 2 பெண்களை திருமணம் செய்த கணவன் 2வது மனைவியுடன் கைது செய்யப்பட்டான். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த ஜோதிமுருகேஸ்வரி மற்றும் கரூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி ஆகியோருக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரசவத்திற்காக  ஜோதிமுருகேஸ்வரி தாயார் வீட்டிற்கு சென்ற போது பாலசுப்பிரமணி நித்யா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு நித்யாவுக்கு தெரியாமல் 3வதாக சுதா என்ற பெண்ணையும் கடந்த ஆண்டு பாலசுப்பிரமணி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜோதி முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலசுப்பிரமணி மற்றும் அவரின் இரண்டாவது மனைவி நித்யா ஆகியோரை கைது செய்தனர். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments