திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் 2 கோடியே 44 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், நிரந்தர உண்டியல்கள் மூலம் 2 கோடியே 28 லட்சத்து 47 ஆயிரத்து 635 ரூபாயும், கோசாலை உண்டியல் மூலம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 758 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் 30 ஆயிரத்து 105 ரூபாயும் என மொத்தம் 2 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 44 ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது.
அதேபோல, 2 ஆயிரத்து 255 கிராம் தங்கம், 16 ஆயிரத்து 27 கிராம் வெள்ளி மற்றும் 46 அயல் நாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments