ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். சலாஹூதீன் மாகாணத்தில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்ற இடத்தில் ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதிகள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 போலீசார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 45க்கும் மேற்பட்டவர்கள் பலாட் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என காவல்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments