Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தியா - சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சுவார்த்தை

எல்லை பிரச்னை தொடர்பாக 3 மாதங்களுக்கு பிறகு இந்தியா - சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
 
கடந்த மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்ததை அடுத்து, இரு நாடுகளும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தின. இதனையடுத்து பாங்கோங் ஏரியின் கரைகளில் இருந்து இரண்டு தரப்பு படைகளும் திரும்பப் பெறப்பட்டன.
எல்லையில் மோதலற்ற போக்கை நிலைநிறுத்த ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 12வது சுற்று பேச்சுவார்த்தை காலை 10.30 மணியளவில் சீன பகுதியில் மால்டோ எல்லையில் நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments