தென் ஆப்பிரிக்காவில் மிகச் சிறிய நண்டு ஒன்றை ஐந்தாறு சிங்கங்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே பின்தொடர்ந்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. மலா மலா உயிரியல் பூங்காவில் ஆற்றங்கரையில் சிங்கக் குடும்பம் ஒன்று இளைப்பாறிக் கொண்டிருந்தது. அப்போது நண்டு ஒன்று சிங்கங்களைக் கடந்து சென்றது. இதனைக் கண்ட சிங்கம் ஒன்று ஆச்சரியத்துடன் அந்த நண்டைப் பின்தொடர்ந்து சென்றது. இதனைக் கண்ட மற்ற சிங்கங்களும் உட்கார்ந்தும், நின்று கொண்டும், நண்டின் நடையைப் பார்த்தவாறு அதனைப் பின் தொடர்ந்தன. இறுதியில் அனைத்து சிங்கங்களையும் கடந்து சென்ற நண்டு பத்திரமாக ஆற்றுக்குள் சென்றது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments