இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். மாநிலங்களுக்கு இடையேயான தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அரியானா வீராங்கனை சீமா பூனியா ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற 63 புள்ளி 50 மீட்டர் வீச வேண்டி இருந்த நிலையில் 63 புள்ளி 72 மீட்டர் தூரம் வீசி தன் வாழ்நாள் அதிகபட்சம் மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்தார். அதேநேரம் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீராங்கனை ஹீமா தாஸ் விலகி ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்டார். ஒலிம்பிக் போட்டிக்குப் தகுதி பெற வீரர் வீராங்கனைகளுக்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவு பெற்றது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments