அடுத்த மாதம் தொடங்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளாததற்கு உரிய காரணங்களை எதுவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் ஒலிம்பிக் போட்டியை காண வீரர் வீராங்கனைகளின் குடும்பத்தார் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், தன் 4 வயது மகளை பிரிய மனமில்லாமல் செரீனா விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ஜப்பானில் பரவி வரும் கொரோனா 4-வது அலையை கருத்தில் கொண்டும் அவர் விலகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments