லண்டனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6பேர் படுகாயம் அடைந்தனர். Elephant and Castle ரயில் நிலைய வளைவு அருகே நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீயில் இருந்து கிளம்பிய கரும்புகை வான் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் 3 வணிக வளாகங்கள், 6 கார்கள், மற்றும் தொலைபேசி பெட்டி முற்றிலும் எரிந்து நாசமாகியது. 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments