கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் பலர் ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் விளக்கம் அளித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறை வரும் ஜூலை 10ம் தேதி முதல் செயல்படுத்தபடுகிறது. இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா தடுப்பூசிகளை அனுமதிப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.இதே போன்று ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த ஐரோப்பிய யூனியனின் இந்திய தூதர் உகோ ஆகஸ்ட்டோ, கோவிஷீல்ட் அங்கீகாரம் கோரி விண்ணப்பம் அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். கோவிஷீல்ட்டுக்குத் தடையேதும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments