கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சிறுமி ஒருவர், தான் வளர்க்கும் அணிலுக்கு புத்திச்சொல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது... கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்தமின் மாற்றியில் இருந்து கடலூர்சாலை, ஜங்ஷன்சாலை பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றி அருகே உள்ள அரசமரத்தில் அணில்கள் கூட்டம் கூட்டமாக வசித்துவரும் நிலையில், முதலில் மின்மாற்றி அருகே சென்ற அணில் ஒன்று மின்சாரம் தாக்கி பலத்த சத்தத்துடன் வெடித்து உயிரிழந்தது. இந்த நிலையில் அந்த அணிலை அடுத்து வந்த மற்றொரு அணிலும் மின்சாரம்தாக்கி இறந்தது. இந்த இரு அணில்களையும் தொடர்ந்து வந்த மூன்றாவது அணிலும் பரிதாபமாக பலியானது. ஒன்றன் பின் ஒன்றாக 3 அணில்கள் பலியான நிலையில் அந்த பகுதியில் மின்சாரம் அரைமணி நேரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அருகிலுள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திய மின்ஊழியர்கள், அந்த அணில்களையும் தூக்கிப்போட்டுவிட்டு மின்சாரம் வழங்கினர். இந்த நிலையில் பள்ளிச்சிறுமி ஒருவர் தான் வளர்க்கும் அணில் குட்டிக்கு மின்வயர் பக்கம் போகாதே என்று புத்தி சொல்வது போன்ற காணொலி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகின்றது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments