அடுத்த சில ஆண்டுகளில் உலகின் வாகன உற்பத்தி முனையமாக இந்தியா உருவாகும் என்று மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் pithampurல் அமைக்கப்பட்டுள்ள ‘நாட்ராக்ஸ்’ என்ற ஆசியாவிலேயே மிக நீளமான அதிவேக வழித்தடத்தை காணொலி மூலம் அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரகாஷ் ஜவடேகர், வாகன உற்பத்தி முனையமாக இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் கனவை நனவாக்க கனரக தொழில்துறை அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது என்றார். வாகனங்கள் மற்றும் உற்பத்தி தொழில்துறையை விரிவாக்கம் செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments