அமெரிக்காவின் மாடெர்னா கொரோனா தடுப்பூசியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவும், அவசரகால பயன்பாட்டிற்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. மும்பையை தலைமையகமாகக் கொண்ட, பன்னாட்டு மருந்து நிறுவனமான சிப்லா, மாடெர்னா தடுப்பூசியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவும், அவசர கால பயன்பாட்டிற்கும் அனுமதி கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்க தயாரிப்பான மாடெர்னா தடுப்பூசி, இந்தியாவில் நான்காவதாக பயன்பாட்டுக்கு வருகிறது. வளர்ந்த நாடுகள் மாடெர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தடுப்பு மருந்துகள் பெரிய அளவிலான உடல்நல பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments