சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருவான்மியூர், அடையாறு. வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக சென்னையில் மேகமூட்டமாக இருந்தாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பெய்த மழையால் இதமான சூழ்நிலை நிலவியது. இதேபோன்று சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments