தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக ஆசைகாட்டி, ஆசிரியை ஒருவரை 4 முறை கர்ப்பிணியாக்கி கருவைக் கலைத்ததாக சீரியல் மேனேஜர் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவருக்கு அறிமுகமான ரகு என்பவர், தொலைக்காட்சி தொடர்களில் மேனேஜராக பணிபுரிவதாகக் கூறியுள்ளார். சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி நெருங்கிப்பழகிய ரகு அந்த ஆசிரியையிடம் மேக்கப் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அழைத்துச்சென்று அத்துமீறியதாக கூறப்படுகின்றது. திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால் ஆசிரியை மவுனமான நிலையில், கர்ப்பமான அவரை கருவை கலைக்க வைத்து பின்னர் மீண்டும் திருமண ஆசை காட்டி அத்துமீறியதாக கூறப்படுகின்றது. எப்படியும் ரகு தன்னை திருமணம் செய்து கொள்வார் என நம்பி அவருடன் ஊர் சுற்றி ஆசைக்கு இணங்கிய நிலையில் 4 முறை கர்ப்பமாகி கருவைக் கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஆசிரியை வேதனை தெரிவித்தார்இந்த நிலையில், ஆசிரியை மீதான மோகம் தீர்ந்ததும் அவரை கழற்றிவிட்ட ரகு, ஆசிரியையின் இருசக்கர வாகனத்தையும், 2 சவரன் செயினையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. ரகு தன்னை ஆசைவார்த்தை கூறி வாழ்க்கையை சீரழித்து விட்டதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்தபோது, ரகுவை அழைத்து விசாரிக்காமல், தனது இரு சக்கர வாகனத்தையும் நகையையும் பெற்றுக்கொடுத்து விட்டு வழக்கை விசாரிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. தனது புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை முறையிட்டார். இதையடுத்து ஆசிரியையின் புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆயினும் காவல்துறையினர், 8 மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே சீரியல் மேனேஜராக இருந்து சில தொடர்களில் நடித்து வரும் ரகு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், புகார்களை வாபஸ் பெறுமாறு தன்னை மிரட்டி வருவதாகவும், காவல்துறையினர் தனது புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுத்ததை போன்று தனது புகார் மீதும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக ஆசையால் மோசம் போன ஆசிரியை தெரிவித்துள்ளர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments