பொதுமக்களின் முகத்தை ஸ்மார்ட் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறை அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ.டி.இ. எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் உதவியால் செயல்படக்கூடியது. சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்டு அதன் தொடர்பு ஒரு ஸ்மார்ட் செல்போனுடன் இணைக்கப்படும்.அந்த செல்போனை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் வருவோரை காவலாளி அல்லது ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் ஒரு சில வினாடிகளில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது அறிந்து கொள்ள முடியும். பச்சை நிறம் ஒளிர்ந்தால் கொரோனா இல்லை என்றும் சிவப்பு நிறம் ஒளிர்ந்தால் கொரோனா உள்ளது என்றும் அர்த்தமாகும். இதனை அடுத்து சிவப்பு நிறம் ஒளிர்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படும்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments